கிழக்கு இலங்கையில் திரகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிண்ணியாவில் குறிஞ்சாக்கேணி கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு தொடக்கம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை எனவும் பின்னர் தி/கிண் அரபா மகா வித்தியாலயம் என்ற பெயருடனும் தொடர்ச்சியாக இயங்கி வந்தது.
கலாச்சார விரும்பியங்களை அடியொட்டியே கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கரு பிரதேச நலன் விரும்பிகள் இடையே மேலோங்கவே ஆண் பெண் என இரு மகா வித்தியாலயங்களளாக பிரிந்தது. 1997 ஜனவரி முதலாம் தேதி தொடக்கம் குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலயம் என பெயர் சூட்டினார். இதன் நிலப்பரப்பு 0.75 என்ற ஏக்கர் மட்டுமே 350 மாணவர்களுடனும் 7 ஆசிரியர்களையும் கொண்டு காணப்பட்டது. இன்று 850 மேற்பட்ட மாணவிகளையும் தரம் ஒன்று தொடக்கும் 13 வரையான தரங்களையும் 1C தரத்தினையும் கொண்டு விளங்கும் இப்படசாலை பிள்ளை நேய பாடசாலையாகவும் நிலைபேண் அபிவிருத்தியை அமுல்படுத்தும் தளமாகவும் திகழ்கின்றது.

இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திருமதி அப்துல் சலாம் , அதனை தொடர்ந்து ஜனாப் AS .ஜுனைதீன், ஜனாப் AM.மூளவுபார், ஜனாப் AS.மாஹில், ஜனாப் ST.நஜீம் ஆகியோர் தற்போது வரை கடமை ஆற்றிய அதிபர்களாகும். சம காலத்தில் அதிபராக விளங்கும் ஜனாப் HTஹினயாதுள்ளா அதிபரின் துடிப்பும் ஆர்வமும் கருமை மாற்றும் ஆற்றலும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் பாடசாலையை வெற்றியின் பாதையில் இட்டுச் செல்லும். இப்படசாலைக்கு காலம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான MEH மஹரூப் அவர்களினால் வழங்கப்பட்ட மாடி கட்டிடம் ஒன்றும் இரண்டு பழைய கட்டடங்களுமே பாடசாலையின் அப்போதைய வளங்களாக காணப்பட்டன. அனால் இன்று நூலகம், கனினியரை, விஞ்ஞான ஆய்வு கூடம், மனையியல் அரை, மைதானம், சிற்றுண்டி சாலை போன்ற உட்கட்டமைப்பு வசதிகளையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டுள்ளது.
குறிஞ்சாக்கேணி மகளிர் மஹா வித்தியாலயமானது "இலக்கை நோக்கிய சிந்தனை" எனும் மகுடவாசகத்தையும், இஸ்லாத்தை பிரதிபலிக்கும் வகையில் பள்ளிவாசலின் முகப்பையும், இயற்கை வளத்தையும் நூல்களின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் வடிவங்களையும் கொண்ட இலட்சினையையும் அமையப்பெற்று காணப்படுகின்றது. இப் பாடசாலையில் கடமை புரியும் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பெற்றார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்பு காரணமாக இன்று பாடசாலை தலைநிமிர்ந்து நிற்கின்றது.






