நல்லருள் செய்தே உலகாலும்
இறைவா உன் மேல் துதி பாடி
எல்லையில்லாத அறிவினையே
பெற நாம் ஒன்றாய் கூடுகின்றோம்
(நல்லருள் )
எழில்சேர் குறிஞ்சாக்கேணியிலே
மகளிர் மஹா வித்தியாலயமாய்
வளரும் கல்விக்கூடம் இது
நலமே காண அருள்வாயே
(நல்லருள் )
பயிலும் தமிழாம் தாய்மொழி போல்
பிறகும் பயின்றே பயனோடு
உயர்வாய் இஸ்லாம் மதத்தினையும்
உயிராய் மதிக்க அருள்வாயே
(நல்லருள் )
அயராது உழைத்தே நாள் தோறும்
அறிவை வார்த்தே மாறாத
நெறியாய் நின்று பணி செய்யும்
குருவை போற்ற அருள்வாயே
(நல்லருள் )
அரிவாள் ஓங்கும் சான்றோரும்
குறையா தன்பால் ஈன்றோரும்.
நிறைவாய் என்னை நிதம் போற்ற
இறைவா நீயே அருள்வாய்
(நல்லருள் )